மாவட்ட செய்திகள்

சத்தியமங்கலத்தில், கோவில் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஓட்டல் தொழிலாளிபோலீஸ் விசாரணையில் அடையாளம் தெரிந்தது + "||" + hotel worker

சத்தியமங்கலத்தில், கோவில் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஓட்டல் தொழிலாளிபோலீஸ் விசாரணையில் அடையாளம் தெரிந்தது

சத்தியமங்கலத்தில், கோவில் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஓட்டல் தொழிலாளிபோலீஸ் விசாரணையில் அடையாளம் தெரிந்தது
சத்தியமங்கலத்தில் கோவில் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஓட்டல் தொழிலாளி என போலீஸ் விசாரணையில் அடையாளம் தெரிந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சத்தியமங்கலத்தில் கோவில் அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தவர் ஓட்டல் தொழிலாளி என போலீஸ் விசாரணையில் அடையாளம் தெரிந்தது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
படுகொலை
சத்தியமங்கலம் பவானி ஆற்றின் கரையில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே கடந்த 21-ந் தேதி ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். 
இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
தனிப்படை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை கல்லால் தாக்கி கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வந்தனர். 
மேலும் கொலையாளிகளை பிடிக்க சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். 
அடையாளம் 
இந்த நிலையில் தனிப்படை போலீசாரின் விசாரணையி்ல், ‘கோவில் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தவர் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் மகன் அப்துல் ரசாக் (வயது 20),’ என தெரியவந்தது. 
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், ‘கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல் ரசாக் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அவ்வாறு வெளியே சென்றவர் மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள ஓட்டல்களில் தொழிலாளியாக வேலை செய்து வந்து உள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வந்த அப்துல் ரசாக் தனது குடும்பத்தாரை பார்த்துவிட்டு மீண்டும் வெளியே சென்றார். வெளியே சென்றவர் எங்கு சென்றார் என்பது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. இந்தநிலையில் மீண்டும் கடந்த 20-ந் தேதி சத்தியமங்கலத்துக்கு அப்துல் ரசாக் வந்து உள்ளார். இரவு நேரத்தில் வந்ததால் காலையில் வீட்டுக்கு செல்லலாம் என்று எண்ணி பவானி ஆற்றின் கரையில் உள்ள வரசித்தி விநாயகர் கோவில் முன்பு படுத்து தூங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை கல்லால் தாக்கி  கொன்றுவிட்டு தப்பிசென்றுவிட்டனர்,’ என்பதும் தெரியவந்தது.
 அதுமட்டுமின்றி கொலை செய்யப்பட்ட அப்துல் ரசாக்கின் உடலை அவரது உறவினர்கள் பார்த்து, அது அப்துல் ரசாக் தான் என உறுதிப்படுத்தினர். 
இதைத்ெதாடர்ந்து    பிரேத பரிசோதனைக்கு பிறகு அப்துல் ரசாக்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஓட்டல் தொழிலாளி திடீர் சாவு
ஓட்டல் தொழிலாளி திடீரென பரிதாபமாக இறந்தார்