பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்று தண்ணீர் திறப்பு

பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்று தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 9:56 PM GMT (Updated: 23 Feb 2021 9:56 PM GMT)

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 3-ம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் நேற்று 3-ம் சுற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று மதியம் 2 மணியளவில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.58 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,819 கன அடியாக இருந்தது.
தண்ணீர் திறப்பு
 அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் காலிங்கராயன் பாசன பகுதிக்கு வினாடிக்கு 300 கன அடியும், கீழ் பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1,500 கன அடியும், தண்ணீர் திறக்கப்பட்டது. 3-ம் சுற்றுக்கு தொடர்ந்து 15 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படும். இடையில் மழை வந்தால் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும் என பவானிசாகர் அணை பிரிவு பொதுப்பணித்துறை அதிகாரி சிங்கார வடிவேலன் தெரிவித்தார்.

Next Story