விலை உயர்வுக்கு கண்டனம்: கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்


விலை உயர்வுக்கு கண்டனம்: கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 3:52 AM IST (Updated: 24 Feb 2021 3:52 AM IST)
t-max-icont-min-icon

விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஈரோடு மரப்பாலம் நால்ரோடு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாவூத் அலி முன்னிலை வகித்தார். இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பேச்சாளர் அப்துல் காதர், ஈரோடு மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம், வர்த்தக அணி மாவட்ட தலைவர் பஜ்லுல் ரகுமான், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
சிலிண்டர்களுக்கு மாலை 
 இதில் கியாஸ் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் முகமது அகீல், முகம்மது அலி, மாவட்ட ஜன்னத்துல் பிர்தவுஸ், பாபுஜி என்ற காதர் உசேன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story