சேலத்தில் 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சேலத்தில் 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 10:24 PM (Updated: 23 Feb 2021 10:24 PM)
t-max-icont-min-icon

சேலத்தில் 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

சேலம்:
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு சங்க மாநில துணை தலைவர் சரோஜா தலைமை தாங்கினார். போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

Next Story