மாவட்ட செய்திகள்

ஆத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில்அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் + "||" + Councilors debate

ஆத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில்அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்

ஆத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில்அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ஆத்தூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ஆத்தூர்:
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் லிங்கம்மாள் பழனிசாமி (அ.தி.மு.க.) தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஒன்றியக்குழு துணைத்தலைவர் கன்னியப்பன் (தே.மு.தி.க.), ஆணையாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் ஆரம்பித்தவுடன் தி.மு.க. கவுன்சிலர்கள் பத்மாபிரியதர்ஷினி, சேகர், கயல்விழி அரசு, அய்யாகண்ணு மற்றும் பரமேஸ்வரி வீராசாமி ஆகியோர் எழுந்து நின்று அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு அதிக நிதியை ஒதுக்கி திட்டப்பணிகள் செய்யப்படுவதாகவும், தங்கள் பகுதிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை எனவும், நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டினர். இதற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய ஆணையாளர் சந்திரசேகரன் நிதி ஒதுக்குவதில் எந்தவித பாகுபாடும் காட்டுவதில்லை என கூறினார். இதனை ஏற்க மறுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது, அ.தி.மு.க. கவுன்சிலர்களான செந்தில்குமார், பன்னீர்செல்வம், சித்ரா பழனிசாமி ஆகியோர் அனைத்து வார்டுகளுக்கும் ஒரே மாதிரியாகத்தான் நிதி ஒதுக்கப்படுகிறது என்று கூறினர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒன்றியக்குழு தலைவர் லிங்கம்மாள் பழனிசாமி, மாவட்ட கலெக்டரிடம் பேசி கூடுதல் நிதி பெற்று அனைத்து பகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் சமாதானம் அடைந்தனர். இதைத்தொடந்து ஒன்றியக்குழு கூட்டம் முடிவடைந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை:அ.தி.மு.க. பிரமுகருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு
நெல்லையில் பட்டப்பகலில் அ.தி.மு.க. பிரமுகரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2. அ.தி.மு.க., உள்கட்சி தேர்தல் நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க., உள்கட்சி தேர்தல் நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
3. தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தி.மு.க.வை கண்டித்து சிதம்பரம், விருத்தாசலத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. அ.தி.மு.க. அரசால் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர் காயலான் கடைக்கு போய் விட்டது தி.மு.க.பொதுச்செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேச்சு
தி.மு.க. ஆட்சியில் கொடுத்த பொருட்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. அரசால் வழங்கப்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறி காயலான் கடைக்கு போய் விட்டது என தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. பேசினார்.
5. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க., தி.மு.க. கோரிக்கை
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. தவிர மற்ற அரசியல் கட்சிகள் தமிழகம் வந்துள்ள தேர்தல் ஆணைய உயர்மட்டக்குழுவிடம் கோரிக்கை விடுத்து உள்ளன.