தென்காசியில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசியில் இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
தென்காசி:
தென்காசி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று (புதன்கிழமை) தென்காசி ெரயில் நகரில் உள்ள தற்காலிக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. கொரோனா காரணமாக காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வந்த இந்த கூட்டம் இன்று நேரடியாக நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வேளாண் துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுக்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் வரும்போது முககவசம் அணிந்து வரவும் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story