மாவட்ட செய்திகள்

லோடு ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு + "||" + The employee of the private company who died in the lorry auto collision died tragically.

லோடு ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு

லோடு ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
லோடு ஆட்டோ மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
அச்சன்புதூர்:
கரூர் மாவட்டம் ராக்குமுத்து கவுண்டன்பாளையத்தை சேர்ந்த சேகர் மகன் மதிஅரசு (வயது 27). அதே மாவட்டம் நல்லிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் லோகேஷ் (19). இவர்கள் இருவரும் தென்காசியில் செயல்படும் கரூரைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று இவர்கள் ராஜபாளையத்தில் இருந்து தென்காசியை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து ெகாண்டிருந்தனர். சொக்கம்பட்டி அருகே சிங்கிலிபட்டியில் வந்தபோது, அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ, ேமாட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மதிஅரசு  பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். லோகேஷ் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவர் மதுரையை சேர்ந்த மருதுபாண்டியை கைது செய்தனர்.