தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தே.மு.தி.க சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
செய்யாறு
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகம் முன்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கோபிநாத் தலைமை தாங்கினார். அவைத் தலைவர் டி.பி.சரவணன், துணை செயலாளர் எம்.ராஜேஷ் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கே செல்வராஜ் வரவேற்றார். இதில் வி.எஸ்.மணிகண்டன், சி.ஏகாம்பரம், பி.தம்பிதுரை ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story