பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு வாகனங்களை எரிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு


பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு வாகனங்களை எரிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு
x
தினத்தந்தி 24 Feb 2021 12:47 PM GMT (Updated: 24 Feb 2021 12:47 PM GMT)

பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு வாகனங்களை எரிக்கும் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு போலீசில் மனு.

செங்கல்பட்டு, 

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் வருகிற 1-ந்தேதி வாகனங்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் செங்கல்பட்டு டவுன் போலீசில் மனு வழங்க சென்றனர். போலீசார் மனுவை வாங்க மறுத்தனர். தொடர்ந்து மனுவை தபால் மூலம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைப்பதாக கூறிவிட்டு அவர்கள் சென்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாளுக்கு நாள் பல்வேறு கோணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் செங்கல்பட்டில் வாகனங்களை தீயிட்டு எரிக்கும் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story