4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்


4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 1:17 PM GMT (Updated: 24 Feb 2021 1:17 PM GMT)

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

சென்னை,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் மற்றும் பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் சத்துணவு ஊழியர்கள் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சுந்தரம்மாள் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது மாநில தலைவர் சுந்தரம்மாள் கூறியதாவது:-

கடந்த 2016 ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா எங்களது 4 அம்ச கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என அறிவித்தார். ஆனால் இதுநாள் வரை எந்த ஒரு அறிவிப்பும் வரவில்லை.

எனவே தற்போதைய தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எங்களது நீண்ட நாள் கோரிக்கையான ரூ.2 ஆயிரம் ஓய்வூதியத்தை ரூ.9 ஆயிரமாகவும், கால முறை ஊதியம் மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுத்து, எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.

மேலும் எங்களது கோரிக்கைகளை பரிசீலனை செய்யவில்லை என்றால், விரைவில் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story