கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 8:09 PM IST (Updated: 24 Feb 2021 8:09 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் ஐயப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கயத்தாறு:
கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் ஐயப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ் வட்டார தலைவர் செல்லப்பாண்டியன், வட்டார செயலாளர் ராஜா,  வட்டார பொருளாளர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரசார செயலாளர் நல்லசாமி வரவேற்று பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது வட்டார துணைத்தலைவர் ராஜ்குமார், வட்டார தணிக்கையாளர் குமரேசன், மாவட்ட பிரதிநிதி அழகிரி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்றனர். மாவட்ட பிரதிநிதி மாரியம்மாள் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பத்தாண்டுகளாக கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்த அனைவருக்கும் பதவி உயர்வு வழங்க கோரியும், அகவிலைப்படி உயர்த்தக் கோரியும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story