பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நூதன போராட்டம்
தூத்துக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சோட்டையன் தோப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சோட்டையன் தோப்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தை நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், சிலுவைப்பட்டி விலக்கு ஆட்டோ ஸ்டாண்ட் செயலாளர் சுதர்சன், உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் கிருஷ்ணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர் ஜான்சன், வக்கீல் அர்ஜூன், கட்டுமான தொழிலாளர் சங்க முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story