மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்குதல், வேலைவாய்ப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு, தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் வாய்ப்பு, வீடு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் தாலுகா தலைவர் முனியசாமி தலைமை தாங்கினார். தாலுகா துணைச்செயலாளர் மயில்சாமி, தாலுகா தலைவர் மாடசாமி, தாலுகா குழு உறுப்பினர் மதன்குமார், தாலுகா பொருளாளர் தங்கபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story