இரவு நேரங்களில் நாய்கள் தொல்லை
போகலூர் கிராமத்தில் இரவு நேரங்களில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
போகலூர்,
பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட போகலூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் வெளியூர் சென்று வேலை பார்த்துவிட்டு திரும்புபவராகவே உள்ளனர். பெரும்பாலான மக்கள் இரவு நேரத்தில் வருகின்றனர். இவர்கள் வேலையை முடித்துவிட்டு திரும்பி வரும் வழியில் நாய்கள் தொல்லையாக இருப்பதால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வாகனங்களில் செல்லும்போது துரத்துவதால் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகுள்ளாகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இதற்கு ஒரு வழிவகை செய்யுமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story