ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகப்பாம்பு புகுந்ததால் செவிலியர்கள் ஓட்டம்

ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகப்பாம்பு புகுந்ததால் செவிலியர்கள் ஓட்டம்
x
தினத்தந்தி 24 Feb 2021 10:55 PM IST (Updated: 24 Feb 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

ஏரியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகப்பாம்பு புகுந்ததால் செவிலியர்கள் ஓட்டம்

ஏரியூர்:
தர்மபுரி மாவட்டம் ஏரியூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் இந்த சுகாதார நிலையத்தை சுற்றிலும் புதர்மண்டி கிடப்பதால் விஷ பூச்சிகள் அவ்வப்போது புகுந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து வெளியே ஓடினர். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அந்த பாம்பை அடித்தனர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நாகப்பாம்பு நுழைந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story