பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன்


பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழா  பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 24 Feb 2021 11:03 PM IST (Updated: 24 Feb 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திக்கடன்

பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு புதூர் பொன் மாரியம்மன்கோவில் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி பொங்கல் வைத்து கோழி, கிடா பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பக்தர்கள் அம்மன், காளி வேடம் அணிந்தும், லாரி கட்டி இழுத்தும், அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி வந்தனர். விழாவையொட்டி பெண்கள் மாவிளக்கு தட்டு மற்றும் பூஜை பொருட்கள் எடுத்து திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து கோவிலுக்கு வந்து வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. 
விழாவையொட்டி மாவட்ட நிர்வாகம் உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் கிருஷ்னகிரி மாவட்டம் முத்துர்டேம் பகுதியை சேர்ந்த குமார் என்பவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் அவருடைய மகள் ஹரிதா (வயது5) காணாமல் போய்விட்டாள். இதனால் பெற்றோர்கள் குழந்தையை தேடினர். தொடர்ந்து போலீசார் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Next Story