குவிந்து கிடக்கும் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்


குவிந்து கிடக்கும் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம்
x
தினத்தந்தி 24 Feb 2021 11:59 PM IST (Updated: 25 Feb 2021 12:01 AM IST)
t-max-icont-min-icon

குவிந்து கிடக்கும் கழிவுகளால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நொய்யல்,

நொய்யல் குறுக்குச் சாலையில் கரூர்- ஈரோடு செல்லும் நெடுஞ்சாலை ஓரத்திலும், நொய்யல் ஆறு ஓரத்திலும், ஆற்றுக்கு செல்லும் வழி நெடுகிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் கோழி கழிவுகள், இறந்த கோழிகளையும் மற்றும் பல்வேறு விதமான அழகிய பொருட்களையும், அழுகிய காய்கறிகளையும் கொட்டி வருகின்றனர். 

மேலும் அப்பகுதியில்களில் உள்ள கடைகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு வந்து இப்பகுதிகளில் கொட்டி குவித்து வருகின்றனர். அதேபோல் அப்பகுதியில் உள்ள கோழிக் கடைகளில் சேகரிக்கப்படும் கோழிக்கழிவுகளையும், இறந்த கோழிகளையும் மூட்டைகளாக கட்டி நொய்யல் ஆறு ஓரத்திலும், ஆற்றுக்கு செல்லும் வழி நெடுகிலும் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. 

இதனால் ஆற்றிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதனால் டெங்கு, மலேரியா உட்பட பல்வேறு மர்ம காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story