அரக்கோணம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் 20 பேருக்கு கொரோனா தடுப்பூசி
தேசிய பேரிடர் மீட்பு படையினர் 20 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
அரக்கோணம்,
அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாட்டின் பல்வேறு இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்ட 20 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினருக்கு சீனியர் கமாண்டர் ரேகா நம்பியார் உத்தரவின்பேரில் நேற்று அரக்கோணம் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் டாக்டர் நிவேதிதா தலைமையிலான மருத்துவக் குழு, முதல் கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டனர்.
தடுப்பூசி போட்டதும் அரைமணி நேரம் மீட்பு படை வீரர்களை மருத்துவமனையிலேயே அமர வைத்து, ஏதேனும் அசவுகரியத்தை உணர்ந்தால் தெரிவிக்க வேண்டும் என்று மருத்துவக் குழுவினர் ேகட்டுக்கொண்டனர். ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வீரர்கள் அசவுகரியம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story