கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குளித்தலை
கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்க வேண்டும். 10 ஆண்டுகள் பணி முடித்த கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 50 சதவீதம் வழங்கவேண்டும். சித்திக் ஐ.ஏ.எஸ். அறிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்கின்ற 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் குளித்தலை கிளை தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். இதில் கிளை செயலாளர் கோவிந்தராஜன், பொருளாளர் சரவணன் மற்றும் கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி கடவூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத்தலைவர் (பொறுப்பு) செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராமரத்தினம், வட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வட்ட துணைத்தலைவர் மாரியப்பன் வரவேற்றார். முடிவில் வட்டார பொருளாளர் திருமுருகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story