மயானத்துக்கு செல்லும் பாதை அடைப்பு மாற்றுவழி அமைத்து இறந்தவர் உடல் அடக்கம்
மாற்றுவழி அமைத்து இறந்தவர் உடல் அடக்கம்
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே எலக்கலகோட்டையை சேர்ந்த ராஜாங்கம் என்பவர் இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து கொண்டு இருந்த போது மயானத்திற்கு கொண்டு செல்லும் பாதையை அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் கருேவல முட் செடிகளை போட்டு அடைந்தார். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங், வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் தற்போது மயானத்திற்கு செல்லும் பாதை வழக்கு விசாரணையில் உள்ளதால் தீர்ப்பு வரும் வரையில் மயானத்திற்கு மாற்று வழி அமைத்து இறந்தவர்கள் சடலங்களை எடுத்து செல்ல அறிவுறுத்தி நேற்று இறந்த ராஜாங்கம் உடலை மாற்று வழியில் மயானத்திற்க்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.
Related Tags :
Next Story