தா.பேட்டை அருகே ஆசிரியையின் கணவர் கொலை: கூலிப்படையை சேர்ந்த 4 பேர் கைது


தா.பேட்டை அருகே ஆசிரியையின் கணவர் கொலை: கூலிப்படையை சேர்ந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Feb 2021 1:04 AM IST (Updated: 25 Feb 2021 1:04 AM IST)
t-max-icont-min-icon

கூலிப்படையை சேர்ந்த 4 பேர் கைது

கள்ளத்தொடர்பு

துறையூர் தாலுகா பி.மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 41). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மோகனாம்பாள் (38). இவர் தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். 

அப்போது அதேபகுதியில் வசிக்கும் உப்பிலியபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கேசியராக பணிபுரியும் ராஜாவுக்கும், மோகனாம்பாளுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 

கொலை

பின்னர் உறவினர்கள் அவர்களை சேர்த்து வைத்தனர்.  இதைத்தொடர்ந்து தா.பேட்டை வடுகர் தெருவில் தங்களது 2 குழந்தைகளுடன் அவர்கள் வசித்து வந்தனர். இந்தநிலையில் மோகனாம்பாள், ராஜா ஆகியோர் பழனிவேலை கூலிப்படை மூலம் தீர்த்து கட்ட முடிவு செய்தனர். 

அதன்படி, கடந்த 19-ந் தேதி துறையூர் வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பழனிவேலை கூலிப்படையினர் மூலம்  அவர்கள் கொலைசெய்தனர். பின்னர், தனது கணவர் விபத்தில் இறந்துவிட்டதாக மோகனாம்பாள் நாடகமாடினார்.

கூலிப்படையினர் 4 பேர் கைது 

இதுகுறித்த புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பழனிவேல் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதைத்தொடர்ந்து மோகனாம்பாள், ராஜா, கூலிப்படையை சேர்ந்த சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்தநிலையில் நேற்று மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளரை பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையை சேர்ந்த பரத் (32), விக்னேஸ்வரன் (21), பிரதீப் (21), கார்த்திக் (26) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story