அரசு விதைப்பண்ணைகளில் கோவை அதிகாரி ஆய்வு
அரசு விதைப்பண்ணைகளில் கோவை அதிகாரி ஆய்வு
திருச்சி,
திருச்சி மாவட்டத்தில் விதைப்பண்ணை பதிவு ஆண்டு இலக்கு 1463 எக்டர் ஆகும். நடப்பு மாதம் முடிய இம்மாவட்டத்தில் 1,408 எக்டர் விதைப்பண்ணை பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் விதைச்சான்று பகுதிகளை கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் சுப்பையா ஆய்வு செய்தார். அப்போது அவர், ஆண்டு இலக்கினை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். பின்னர் லால்குடி வட்டாரம் நெய்குப்பைப்புதூரில் அமைந்துள்ள அரசு விதைப்பண்ணையில் நடப்பு பருவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆதார நிலை நெல் ரக விதைப்பண்ணைகளை ஆய்வு செய்து கலவன்கள் எடுத்து விதையின் தரத்தினை உறுதி செய்ய விதைச் சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து குமுளூர் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வல்லுனர் விதை உற்பத்தி செய்ய அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை BSR1 ரக விதைப்பண்ணையையும், விதை சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆய்வு செய்தார். பின்னர் லால்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தையும் ஆய்வு செய்தார். ஆய்வின்போது திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சாந்தி, வேளாண்மை துணை இயக்குனர் (மாநிலத் திட்டம்) லட்சுமணசாமி, விதை ஆய்வு துணை இயக்குனர் வசந்தா, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிவழகன் மற்றும் விதைச்சான்று அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story