6 தாசில்தார்கள் இடமாற்றம்


6 தாசில்தார்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 25 Feb 2021 1:26 AM IST (Updated: 25 Feb 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் 6 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் 6 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
தாசில்தார்கள் இடமாற்றம்
சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் குமரி மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 6 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 
அதாவது பேரிடர் மேலாண்மை தாசில்தார் சுப்பிரமணியன் பத்மநாபபுரம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும், நாகர்கோவில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோலப்பன் நாகர்கோவில் உதவி ஆணையர் (ஆயம்) அலுவலக உசூர் மேலாளராகவும், நாகர்கோவில் உதவி ஆணையர் (ஆயம்) அலுவலக உசூர் மேலாளர் ராஜேஷ்வரி நாகர்கோவில் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். 
டாஸ்மாக்
இதே போல் ஆதிதிராவிடர் நலம் தாசில்தார் இசபெல் வசந்தி ராணி செண்பகராமன்புதூர் டாஸ்மாக் கிட்டங்கி மேலாளராகவும், பத்மநாபபுரம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேஷ் நாகர்கோவில் ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தாராகவும், செண்பகராமன்புதூர் டாஸ்மாக் கிட்டங்கி மேலாளர் பத்மகுமார் நாகர்கோவில் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை கலெக்டர் அரவிந்த் பிறப்பித்துள்ளார்.

Next Story