கோவில்களில் குபேர பிரதோஷ வழிபாடு
கோவில்களில் குபேர பிரதோஷ வழிபாடு
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் குபேர பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மஞ்சள், மாவு, திரவியம், வில்வம், அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. இதேபோல, தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மார்க்கசகாயேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் குபேர பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி அம்பாள், நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

Related Tags :
Next Story