ஈரோட்டில் 3-வது முறையாக சம்பவம் பாலமுருகன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஈரோட்டில் 3-வது முறையாக பாலமுருகன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்ட போனது. இது தொடர்பாக மர்மநபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோட்டில் 3-வது முறையாக பாலமுருகன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்ட போனது. இது தொடர்பாக மர்மநபருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பாலமுருகன் கோவில்
ஈரோடு மணல்மேட்டில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை பூஜை செய்வதற்காக பூசாரி சென்றார். அப்போது கோவிலின் கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
மர்மநபர்
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சூரம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் நள்ளிரவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்த மர்மநபர் உண்டியல் காணிக்கையை திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகிறார்கள். இந்த கோவிலில் ஏற்கனவே 2 முறை திருட்டு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story