மாநகர போலீஸ் கமிஷனர் மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு
மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று.
மதுரை,
மதுரையைச் சேர்ந்த செல்வகுமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், “ராமருக்கு அயோத்தியில் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்காக அனைவரிடமிருந்தும் பொருள் உதவி பெறும் நோக்கில் ரத யாத்திரையை நடத்த திட்டமிட்டுள்ளோம். அந்த வகையில் மதுரையில் 100 வார்டுகளில் அந்த வாகனத்தை ஒலிபெருக்கியுடன் இயக்க அனுமதி கோரி உதவி போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்தோம். அனுமதி வழங்க இயலாது என மனுவை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி உத்தரவிட்டிருந்தது. ஆனால் தற்போதுவரை அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை.
மேல்முறையீட்டு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவை நடைமுறைப்படுத்தாத மதுரை மாநகர போலீஸ் கமிஷனர், திலகர்திடல் உதவி போலீஸ் கமிஷனர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story