கொண்டலாம்பட்டியில் ஓய்வுபெற்ற சார்பதிவாளர் விபத்தில் பலி
ஓய்வுபெற்ற சார்பதிவாளர் விபத்தில் பலி
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சீலநாயக்கன்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 70). ஓய்வு பெற்ற சார்பதிவாளர். இவர் நேற்று வீட்டிலிருந்து கொண்டலாம்பட்டி பகுதிக்கு மொபட்டில் வந்தார். கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதிக்கு வந்தபோது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி முனிராஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், முனிராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்தில் சீலநாயக்கன்பட்டி சாமி நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி ஜானகி (55) என்பவரும் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story