சாலை பாதுகாப்பு வார விழா
சாலை பாதுகாப்பு வார விழா
இளையான்குடி
இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் சாலை பாதுகாப்பு வார விழா கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் நடைபெற்றது. விழாவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அப்ரோஸ் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். இளையான்குடி காவல் நிலைய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், ஜான் கென்னடி மற்றும் சிவகங்கை அரசு அவசர ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் சவுந்திர பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு, விபத்து, முதலுதவி மற்றும் சாலை விதிமுறைகளை மதித்து நடப்பதின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளித்தனர். இந்தநிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ- மாணவியர்கள், கல்லூரியில் பணிபுரியும் பஸ் டிரைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இறுதியாக நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செய்யது யூசுப் நன்றி கூறினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பீர் முகமது நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.
Related Tags :
Next Story