மலைநாச்சியம்மன் கோவில் திருவிழா


மலைநாச்சியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 25 Feb 2021 2:56 AM IST (Updated: 25 Feb 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

மலைநாச்சியம்மன் கோவில் திருவிழா

எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே பிரான்பட்டியில் உள்ள மலைநாச்சியம்மன் கோவில் மாசி மாத திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது.. காப்பு கட்டிய நாள் முதல் பிரான்பட்டி மந்தை கோவில் முன்பாக பெண்கள் கும்மி அடித்து வழிபட்டனர். காப்பு கட்டிய 8-வது நாள் திருவிழா நடைபெற்றது. முன்னதாக பெண்கள் பொங்கல் கூடை சுமந்து வந்து ஆலயத்தின் முன்பாக பொங்கல் வைத்தும், மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். அதனைதொடர்ந்து வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கடந்த ஆண்டுகளில் குழந்தை பாக்கியம் வேண்டி சென்றவர்கள் இந்த ஆண்டு நேர்த்திக்கடன் செலுத்த கரும்பு தொட்டில்கள் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவில் பிரான்பட்டி, தேனூர், புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, கணபதிபட்டி, குன்னத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story