சத்தியமங்கலத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ் மர்ம நபருக்கு வலைவீச்சு


சத்தியமங்கலத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வங்கி கணக்கில் நூதன முறையில் பணம் அபேஸ் மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Feb 2021 9:29 PM GMT (Updated: 24 Feb 2021 9:29 PM GMT)

சத்தியமங்கலத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வங்கி கணக்கில் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சத்தியமங்கலத்தில் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வங்கி கணக்கில் நூதன முறையில் பணத்தை அபேஸ் செய்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள  ஒரு வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ளார். இவர் தனது வங்கி கணக்கில் செலுத்தப்படும் ஓய்வூதிய பணத்தை ஏ.டி.எம்.மில் அவ்வப்போது எடுத்து வந்தார்.
அதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு சத்தியமங்கலம் வந்த நடராஜன் வங்கி ஏ.டி.எம்.மில் ரூ.5 ஆயிரம் எடுத்துள்ளார். மீண்டும் பணம் எடுப்பதற்காக கார்டை எந்திரத்தில் சொருகிய போது ‘கார்டு பிளாக்’ என காட்டியது.
ஏ.டி.எம். காா்டை மாற்றி கொடுத்து...
இதனைப்பார்த்த அருகே நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், நடராஜனின் ஏ.டி.எம். கார்டை வாங்கி உதவுவது போல பேசி வேறு ஒரு கார்டை மாற்றி கொடுத்துள்ளார். தன்னுடைய ஏ.டி.எம். கார்டு என நினைத்து நடராஜன் அந்த கார்டை வாங்கிக்கொண்டு வங்கி உள்ளே சென்றுள்ளார்.
அங்கு பணம் எடுப்பதற்காக அவர் படிவம் எழுதி கவுன்ட்டரில் கொடுத்துள்ளார். அதை பார்த்த அதிகாரிகள், அவரது வங்கி கணக்கை சரிபார்த்துவிட்டு பணம் இல்லை. ஏ.டி.எம் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டு விட்டது என்று கூறினார்கள். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பணம் அபேஸ்
அப்போது  நடராஜன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். மர்மநபர் வேறு ஒரு கார்டை தன்னிடம் கொடுத்துவிட்டு தன்னுடைய ஏ.டி.எம். கார்டை வாங்கி பயன்படுத்தி ரூ.58 ஆயிரத்து 800 பணம் எடுத்து நூதன முறையில் அபேஸ் செய்தது தெரிய வந்தது.
இதுகுறித்து நடராஜன் வங்கி கிளை மேலாளரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள

Next Story