உலக தாய் மொழி தின விழா
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உலக தாய் மொழி தின விழா கொண்டாடப்பட்டது.
நெல்லை, பிப்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் உலக தாய் மொழி தினவிழா கொண்டாடப்பட்டது. இளங்கலை 3-ம் ஆண்டு மாணவி சுப்புலட்சுமி வரவேற்றார். கல்லூரி முதல்வர் மேஜர் டி.ராஜன் தலைமை தாங்கி, தமிழின் தொன்மை மற்றும் தமிழ் மாணவர்களின் வேலைவாய்ப்பு பற்றி எடுத்துரைத்தார். துறை தலைவர் கிரிஜா, தமிழின் பெருமை பற்றி கருத்துரை வழங்கினார். காணொலி காட்சி மூலம் தமிழின் சிறப்பு பற்றி மாணவர்களிடத்தில் ஒளிபரப்பப்பட்டது. உலக தாய் மொழி தினத்தையொட்டி கவிதை மற்றும் கட்டுரை, பேச்சு, பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் முதல் 3 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவி மகேஸ்வரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் சோனா கிறிஸ்டி, சவரி ராயம்மாள், முருகவேல், பால்மோகன், சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story