சேலம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே ெகாரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 24 வயது வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Related Tags :
Next Story