பாவூர்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
பாவூர்சத்திரத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பாவூர்சத்திரம், பிப்:
தென்காசி பழைய பஸ் நிலையம் அருகில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் சுடலை, மாவட்ட பொருளாளர் லாட சன்னியாசி என்ற சாமிநாத பாண்டியன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சிவ சீதாராம், வர்த்தக அணி துணை செயலாளர் முருகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரத்தில் பஸ் நிலையம் அருகில் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஒன்றிய செயலாளர்கள் அமல்ராஜ் (கீழப்பாவூர் மேற்கு), இருளப்பன் (கிழக்கு), மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கணபதி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் சரவணன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் டி.இளஅரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story