ஈரோடு சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா
ஈரோடு சூரம்பட்டியில் மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது.
ஈரோடு சூரம்பட்டியில் மாகாளியம்மன் கோவில் குண்டம் விழா நடைபெற்றது.
மாகாளியம்மன் கோவில்
ஈரோடு சூரம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 16-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இரவில் குண்டம் பற்ற வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய கரும்புகளை (விறகு) அடுக்கி வைத்து தீ பற்ற வைக்கப்பட்டது. நேற்று அதிகாலையில் குண்டம் தயாரானாது.
தீ மிதித்தார்கள்...
கோவிலின் தலைமை பூசாரி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் அவர் தீ மிதித்து குண்டம் விழாவை தொடங்கி வைத்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குண்டம் இறங்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கோவிலின் பூசாரிகள் மற்றும் விழாக்குழுவை சேர்ந்த பக்தர்கள் உள்ளிட்டோர் தீ மிதித்தார்கள். விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) நடக்கும் மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
Related Tags :
Next Story