திருவள்ளூரில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது


திருவள்ளூரில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 25 Feb 2021 7:32 AM IST (Updated: 25 Feb 2021 7:32 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் மற்றும் திறன் பயிற்சிக்கு ஆள் சேர்ப்பு நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் பல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை பெற்று பயன்பெறலாம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story