மனம் திருந்தி வாழும் சாராய வியாபாரிகளுக்கு விலையில்லா மாடுகள்


மனம் திருந்தி வாழும் சாராய வியாபாரிகளுக்கு விலையில்லா மாடுகள்
x
தினத்தந்தி 25 Feb 2021 7:52 AM IST (Updated: 25 Feb 2021 7:52 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் மனம் திருந்தி வாழும் சாராய வியாபாரிகளுக்கு விலையில்லா மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை, 

மனம் திருந்தி வாழும் சாராய வியாபாரிகளுக்கு தமிழக அரசின் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மாடு, கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி ஊத்துக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பெரியபாளையம் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்தாஸ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவள்ளூர் மாவட்டம் பூரிவாக்கம், கன்னிகைப்பேர், அக்கரம்பாக்கம், தாமரைப்பாக்கம், அம்மம்பாக்கம் மற்றும் இதர பகுதிகளை சேர்ந்த 16 பேருக்கு மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலா ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விலையில்லா மாடு மற்றும் கன்றுகளை வழங்கினார். கால்நடைத்துறை டாக்டர்கள் வனிதா, மகாலட்சுமி மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story