பெரியபாளையம் அருகே, 3 குடிசைகள் எரிந்து சேதம்
பெரியபாளையம் அருகே 3 குடிசைகள் எரிந்து சேதமடைந்தது.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே மெய்யூர் பள்ளகாலனியை சேர்ந்தவர்கள் ஏழுமலை (வயது 55), ராஜம் (50), பிரேம்குமார் (30). இவர்களுடைய குடிசைகள் அருகருகே உள்ளன. நேற்று மதியம் இவர்களது குடிசைகள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து திருவள்ளூர் தீயணைப்பு நிலைய நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் இவர்களது குடிசையில் இருந்த துணி மற்றும் தட்டு, முட்டு சாமான்கள் தீக்கிரையானது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story