மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்டலூர்,
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கூடுவாஞ்சேரியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.கே.ஹைதர் அலி, யு.அஷ்ரப் அலி, நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூர் தலைவர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப், தலைமை கழக பேச்சாளர் பாருக் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
Related Tags :
Next Story