மாவட்ட செய்திகள்

பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம் + "||" + Those who join the BJP will disappear; Those who lost the deposit dissolved the regime: Narayanasamy furious

பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்

பா.ஜ.க.வில் சேருபவர்கள் காணாமல் போவார்கள்; டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர்; புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆவேசம்
பா.ஜ.க.வில் சேருபவர்கள் வரும் தேர்தலுடன் காணாமல் போவார்கள். டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கலைத்தனர் என்று நாராயணசாமி கூறினார்.
புதுவையில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை கண்டித்து மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் அண்ணாசிலை அருகே நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

ஜனநாயக படுகொலை
மத்தியில் ஆளும் மதவாத பா.ஜ.க. அரசு புதுவை மாநிலத்தை அவமதித்ததை கண்டிக்கிறோம். நாடு முழுவதிலும் பல்வேறு தலைவர்கள் நமக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். புதுவையில் மட்டுமல்லாது பல மாநிலங்களில் பா.ஜ.க. ஜனநாயக படுகொலை செய்துள்ளது. மணிப்பூர், அருணாசலப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் குதிரைபேரம் நடத்தி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சிக்கவிழ்ப்பு செய்தனர். கர்நாடகாவில் பல ஆயிரம் கோடி பேரம் பேசி ஆட்சி மாற்றம் செய்தனர்.

மானங்கெட்ட செயல்
புதுவை மாநிலத்தில் 5 ஆண்டுகளை நாம் நிறைவு செய்துவிட்டோம். தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ஆட்சியை கவிழ்க்கும் மானங்கெட்ட செயலை என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க.வினர் செய்துள்ளனர். பணபலம், அதிகார பலத்தை பயன்படுத்தியும், காங்கிரஸ் கட்சியில் உள்ள சில துரோகிகளை பயன்படுத்தியும் ஆட்சியை கவிழ்த்தனர். ஆனால் புதிதாக அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. நியமன எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் வாக்களிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை.

டெபாசிட் இழந்தவர்கள்
கடந்த சட்டமன்ற தேர்தலில் 18 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட்டது. அதில் எத்தனை இடங்களில் டெபாசிட் பெற்றது. பா.ஜ.க. வுடன் சேருபவர்களும் இந்த தேர்தலோடு காணாமல் போவார்கள். டெபாசிட் இழந்தவர்கள் ஆட்சியை கவிழ்த்துள்ளனர். அரியானாவில் சவுதலாவின் பேரன் 10 எம்.எல்.ஏ.க்களை பெற்றார். அவருடன் கூட்டணி அமைத்த பா.ஜ.க. பின்னர் அவருடன் இருந்த 9 எம்.எல்.ஏ.க்களை தங்கள் வசப்படுத்தினர். அதேநிலைதான் நாளைக்கு ரங்கசாமிக்கு ஏற்படும்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., வைத்திலிங்கம் எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜ.க. முதல்-மந்திரி வேட்பாளராக ஸ்ரீதரனை நான் அறிவிக்கவில்லை - மாநில பா.ஜ.க. தலைவர் மறுப்பு
கேரளாவில் பாஜக முதல்-மந்திரி வேட்பாளராக மெட்ரோ மேன் ஸ்ரீதரனை தாம் அறிவிக்கவில்லை என அம்மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
2. சமூகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது -தொல்.திருமாவளவன்
சமூகத்தில் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது என்று தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டினார்
3. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை எரித்து பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதை தடுத்த போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்தனர்.
4. பா.ஜ.க. விரித்த வலையில் ரஜினிகாந்த் சிக்காமல் தப்பித்துக்கொண்டார் - கே.எஸ்.அழகிரி விமர்சனம்
பா.ஜ.க. விரித்த வலையில் ரஜினிகாந்த் சிக்காமல் தப்பித்துக்கொண்டதாக கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
5. பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து காரைக்காலில் பாரதீய ஜனதா கட்சியினர் பழைய ரெயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.