குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்


குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர்
x
தினத்தந்தி 25 Feb 2021 10:48 AM IST (Updated: 25 Feb 2021 11:59 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத் தகராறில் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர், 

சென்னை வியாசர்பாடி தேவர் நகரைச் சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவருடைய தங்கை அஞ்சலி (வயது 30). இவருக்கு திருமணமாகி காசிமேடு பகுதியில் கணவர் சுப்பிரமணியுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கொரோனா ஊரடங்கு நேரத்தில் சுப்பிரமணி தனது மனைவி அஞ்சலியுடன் அவரது அண்ணன் ராஜீவ்காந்தி வீட்டில் வந்து தங்கினர்.

நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணிக்கும், அவருடைய மனைவி அஞ்சலிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, கத்தியால் அஞ்சலியின் கழுத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியை தேடி வருகின்றனர்.


Next Story