கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நலவாரிய அட்டையை புதுப்பிக்க வலியுறுத்தல்


கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நலவாரிய அட்டையை புதுப்பிக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Feb 2021 4:47 PM IST (Updated: 25 Feb 2021 4:47 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், நலவாரிய அட்டைகளை புதுப்பிக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டியில், நலவாரிய அட்டைகளை புதுப்பிக்க கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தீப்பெட்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியிலுள்ள தொழிலாளர் துணை ஆய்வாளர் அலுவலகம் முன்பு நேற்று சி.ஐ.டி.யு. தீப்பெட்டி தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தீப்பெட்டி சங்க தலைவர் மோகன் தாஸ் தலைமை தாங்கினார்.  தீப்பெட்டி சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 
கோரிக்கைகள்
தீப்பெட்டி தொழிலாளர்களின் நலவாரிய அட்டைகளை புதுப்பிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா கால நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் கிடைக்காத தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு 2019-2020, 2020 - 21-ம் ஆண்டுகளுக்கான கல்வி உதவித் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 
கலந்து கொண்டவர்கள்
இதில் சங்க மாவட்ட குழு உறுப்பினர் தெய்வேந்திரன், நகர குழு உறுப்பினர் அந்தோணி செல்வம், ஆனந்த், மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பின்னர் தொழிலாளர் துணை ஆய்வாளர் என்.பாலகிருஷ்ணனிடம் மனு கொடுத்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story