பச்சை நிறமாக மாறிய வேலூர் கோட்டை அகழி நீர்
பச்சை நிறமாக மாறிய வேலூர் கோட்டை அகழி நீர்
வேலூர்
வேலூர் மாநகரின் மையப்பகுதியில் வேலூர் கோட்டை அகழியுடன் பிரமாண்டாக அமைந்துள்ளது. முக்கிய சுற்றுலா தலமான இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து கோட்டையின் அழகை ரசித்து செல்கின்றனர். இதுதவிர அருங்காட்சியம், கோவிலுக்கு என பொதுமக்களின் வருகை அதிகமாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக கோட்டை அகழியில் நீர் உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அகழ நீர் பச்சை நிறமாக மாறி காட்சியளித்தது. இதை பொதுமக்கள் வியப்பாக பார்த்துச் சென்றனர்.
இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறுகையில், பருவகால மாற்றம் காரணமாக அகழி நீரின் நிறம் பச்சையாக மாறி உள்ளது. மீன்கள் இறக்காததால் நீர் மாசு அடையவில்லை என்பது தெரியவருகிறது. இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு தெரிவிக்க உள்ளோம் என்றனர்.
Related Tags :
Next Story