தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம்
திமிரியில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கலவை
திமிரியில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திமிரி வட்டார கிளை சார்பாக காத்திருப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. திமிரி வட்டார தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் ரகு, பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் சுந்தரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட தலைவர் மணி, மாவட்ட செயலாளர் அமர்நாத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிவராஜ், பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர்கள் மணிவண்ணன், குமார் மற்றும் திமிரி வட்டார பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைந்திட நடவடிக்கை எடுக்காத வட்டாரக்கல்வி அலுவலகத்தை கண்டிப்பது என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
அதைத்தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு நேரில் வந்து கோரிக்கைகள் 2 மாதத்திற்குள் நிறைவேற்றித் தரப்படும் என்று உறுதிமொழி அளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Related Tags :
Next Story