திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1½ கோடி 48 நாளில் கிடைத்தது
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1½ கோடி 48 நாளில் கிடைத்தது.
பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 48 நாட்களுக்கு பிறகு கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையரும் செயல் அலுவலருமான பழனிகுமார், உதவி ஆணையர் ரமணி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் உதவி ஆணையர் ஜெயா ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ.1 கோடியே 48 லட்சத்து 28 ஆயிரத்து 600 கிடைத்தது.
மேலும் 1 கிலோ 242 கிராம் தங்கம், 7 கிலோ 720 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story