கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மெகதூத் செயலி மற்றும் வானிலை சார்ந்த வேளாண் சேவை குறித்த விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கர் தலைமையில் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மெகதூத் செயலி மற்றும் வானிலை சார்ந்த வேளாண் சேவை குறித்த விவசாயிகள் விழிப்புணர்வு முகாம் ஆராய்ச்சி நிலைய தலைவர் பாஸ்கர் தலைமையில் நடந்தது. உதவிப்பேராசிரியர் ஆர்த்தி ராணி வரவேற்றார். முகாமில் விளாத்திகுளம் கால்நடை மருத்துவர் கருப்பசாமி, நெல்லை அகில இந்திய வானொலி நிலைய அதிகாரி திருமலைநம்பி, அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பேசினர்.
இதில், மழை, வெப்பநிலை, வெயில், பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள், அதனை தவிர்ப்பது உள்ளிட்டவைகளை அறிவிக்கும் மெகதூத் செயலி குறித்தும், மழைக்காலங்களில் ஏற்படும் இடி, மின்னல் ஆகியவற்றிலிருந்து விவசாயிகள் தங்களையும், தங்களது கால்நடைகளையும் தற்காத்து கொள்ள உதவும் தாமினி செயலி குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story