தூத்துக்குடியில் வாதிரியார் மகாஜன சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்


தூத்துக்குடியில் வாதிரியார் மகாஜன சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 7:29 PM IST (Updated: 25 Feb 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வாதிரியார் மகாஜன சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாதிரியார் மகாஜன சங்கத்தினர் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதம்
தமிழ்நாடு வாதிரியார் மகாஜன சங்கம் சார்பில் தூத்துக்குடி சில்வர்புரம் மெயின் ரோட்டில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க தலைவர் ஆத்திமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் தர்மநாதன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தனிமனித உரிமையை பறித்து, வாதிரியார் சமூகத்தை தேவேந்திரகுல வேளாளர் என்ற உட்பிரிவில் சேர்த்து பரிந்துரை செய்த தமிழக அரசையும், அதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசையும் கண்டிப்பது, வாதிரியார் சமூகத்தை தேவேந்திரகுல வேளாளர் அமைப்பில் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி பேசினர்.
கலந்து கொண்டவர்கள்
உண்ணாவிரத போராட்டத்தில் முன்னாள் செயலாளர் பர்னபாஸ், பொருளாளர் தபராசு, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜெயசேகர், பிலிப், சுரேஷ், சின்னத்துரை மற்றும் ஜெயமுருகன், கனகராஜ், நடராஜன் உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


Next Story