உடன்குடியில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி
உடன்குடியில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
உடன்குடி:
உடன்குடியில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உடன்குடி, குலசேகரன்பட்டணம் எஸ்.டிபி.ஐ. கிளைகள் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் பொதுக்கூட்டம் உடன்குடி சந்தையடித் தெருவில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.டி.பி.ஐ தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார்.கிளைத் தலைவர்கள் சுல்தான் பாதுஷா (குலசேகரன்பட்டணம்) ஹாஜா முகைதீன் (உடன்குடி) உடன்குடி ஜக்கிய ஜமாஅத் கமிட்டி உறுப்பினர் மஹபூப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் கலந்து கொண்டு ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்து பேசினார்.
இதில் மாநில தலைவர் முஹம்மது பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் சௌகத் அலிஉஸ்மானி, பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் அப்துல்காதர், பெண்கள் அமைப்பின் நெல்லை மாவட்ட செயலாளர் பாத்திமா நுஸ்ரத் ஆகியோர் பேசினார்கள்.முன்னதாக கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், களப்பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கினர். குலசேகரன்பட்டணம் கிளை செயலாளர் ஹாஜா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story