காங்கேயம் பணிமனையில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கம் பயணிகள் கடும் அவதி
காங்கேயம் பணிமனையில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
காங்கேயம்
காங்கேயம் பணிமனையில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிப்பட்டனர்.
போராட்டம்
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்டதொழிற் சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை.
அரசு போக்குவரத்து கழக காங்கேயம் பணிமனையில் இருந்து 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. காங்கேயம் பணிமனையில் மொத்தம் 75 பஸ்கள் உள்ளன. இதில் வெளியூர் செல்லும் பஸ்கள் 12, டவுன் பஸ்கள் 17 என மொத்தம் 29 பஸ்கள் மட்டுமே இயங்கின.
பயணிகள் அவதி
இதனால் காங்கேயம் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள், மற்றும் திருப்பூர் பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லும் பயணிகள் மற்றும் கிராமங்களிலிருந்து வேலைக்கு செல்லும் பயணிகள் ஆகியோர் பஸ் இல்லாமல் சிரமப்பட்டனர். மேலும் நேற்று முகூர்த்த நாள் என்பதால் திருமணம், காதணிவிழா, புதுமனை புகு விழா, திருமண வரவேற்பு உள்ளிட்ட விவேசங்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் குறைவான பஸ்களே இயங்கியதால் பொதுமக்கள் தங்கள் விசேஷங்களுக்கு செல்லமுடியாமல் நீண்ட நேரம் பஸ் நிலையத்தில் காத்திருக்கும் சூழல் உருவானது. மேலும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
Related Tags :
Next Story