ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
திருவாரூர்,
திருவாரூர் ரெயில்வே மேம்பாலம் அருகில் நாகை பை-பாஸ் சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த பை-பாஸ் சாலையில் இருந்து ஒழுங்கு முறை விற்பனை கூட அலுவலகத்துக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து நீண்டகாலமாக பாரமரிப்பு இன்றி உள்ளது.
அகலப்படுத்த கோரிக்கை
விவசாயிகள் பருத்தி போன்ற விளை பொருட்களை விற்பனை செய்யவும், விளை பொருட்களை இருப்பு வைக்கவும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இங்கு லாரி, வேன் போன்ற கனரக வாகனங்கள் வந்து செல்வது வழக்கம். இந்த சாலை மிகவும் குறுகியதாகவும், வாகனங்கள் செல்வதற்கு பயனற்ற நிலையில் உள்ளது. எனவே இந்த சாலைைய அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என விளை பொருட்களை கொண்டு வரும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story