டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Feb 2021 10:46 PM IST (Updated: 25 Feb 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

பணிநிரந்தரம் செய்யக்கோரி நாகையில், டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு நேற்று டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர்கள் தொ.மு.ச வீரபாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி சிவதாஸ், சி.ஐ.டி.யூ. சிவக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.. ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் மகேந்திரன், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் சிவனருட்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  18 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம், பணிவரன், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும்.  மேற்கண்ட கோரிக்கை நிறைவேற்றப்படுவதாக நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநிலச் செயலாளர் இளங்கோவன், தொ.மு.ச மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் கவியரசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரபோஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட பொருளாளர் அம்பேத்கர் நன்றி கூறினார்.

Next Story